ADDRESS

NH45A Erukkur Main Road

Sirkazhi (Sirkali)

Nagappattinam Dt

Tamilnadu

India- 609108

Our Lady of Erukkur Shrine 

ABOUT US

© 2019-20 by Our Lady of Voyage Shrine Erukkur - தூய சிந்தாத்திரை மாதா

    Powered with Leo♥Designs

   WhatsApp Group Subscription, Please contact +91 9442030818

திருத்தல வரலாறு, தூய சிந்தாத்திரை மாதா வரலாறு

இந்தியாவில், தமிழ்நாட்டில், திருத்தலத்திற்கு புகழ் பெற்ற நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் (வேளாங்கன்னி,மயிலாடுதுறை to பாண்டிச்சேரி (அ) புதுச்சேரி, சென்னை) தேசிய நெடுஞ்சாலையின் 6-வது கீ.மீ இல் உள்ள ஊரான எருக்கூரில் வழி செல்வோரை விழியென காக்கும் பயணத்தின் பாதுகாவலியாம் "தூய சிந்தாத்திரை மாதா" அழகுற காட்சியளிக்கின்றார்.    
சிந்தாத்திரை மாதா


 சிந்தாத்திரை என்றால் சிந்தாத்திரை - சிந்தாத்திரி, S(Prove) Corruption of சிந்தாயாத்திரை ( Ex- சிந்தா  Not Failing - தோல்வியடையாத, நல்ல,யாத்திரை Voyage of Journey 2. Safety, Welfare, Prosperity, சுகவாழ்வு, சிந்தாத்திரையாய் போக  inf, To make a safe Voyage. 

சிந்தாத்திரை மாதா, பயணம் செய்வோர் அனைவரும் குறிப்பாக வாகனங்களில் பயணம் செய்வோர், மீனவர்கள்,மாலுமிகள்,பைலட், ஓட்டுனர்கள், வெளிநாடு செல்வோர் (கடல்,வான்வழி), திருமணத்தால்  வாழ்க்கை பயணத்தை தொடங்குபவர்கள், புதிதாக வாகனங்களை  வாங்குபவர்களுக்கும் பாதுகாவலியாக இருக்கின்றார்.

"உங்கள் பயணம் நற்பயணமாக  அமைய வாழ்த்துகிறோம், செபிக்கின்றோம்!" 

கி.பி 1534 -யில் வங்கக்கடலின் கிழக்கு கடற்கரையில் உள்ள புலிகாட், சதராஸ், குன்னிமேடு, கல்பட்,புதுச்சேரி, தேவனாம்ப்பட்டினம், கடலூர், போட்-நோவா, கொளரூன், திருமுல்லைவாசல், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் போர்த்துக்கீசிய வாணிபர்கள் பண்டகசாலைகளையும், அதன் உள்ளே சிறிய தேவாலயங்களையும் கட்டினர்.தங்களுடைய ஆன்மிக தேவைகளுக்காகவும்,மறைபரப்பு பணிகளுக்காகவும், போர்த்துக்கீசிய குருக்களையும்  அழைத்து வந்தனர்.  

கி.பி 1550 களில் காவேரியின் கிளையான கொள்ளிடம் ஆறும், வந்ககடலும் கலக்கின்ற இடத்தில் உள்ள தீவான கொளரூன் (கோலேரூன்,  போர்த்துகீசியர் வைத்த பெயர்), தற்பொழுது கோட்டைமேடு என்று அழைக்கப்படுகின்ற தீவில்  பண்டகசாலையும், தேவாலயமும் கட்டினர்.  இதைச்சுற்றி போர்த்துகீசிய வாணிபர்கள், யூரேசியன் மக்கள்,போர்த்துகீசிய குருக்கள்,கோவா கிறிஸ்துவர்கள் குடியேறினர்.

இங்குள்ள தேவாலயத்தில் நசரேத்தூரின் பயண மாதா சுரூபத்தைக் (Our Lady of Travelers of Nazareth) கொண்டு வந்து வழிபட்டனர். இவ்வன்னையின் மூலவடிவம் நசரேத்தூரில் உள்ள திருக்குடும்ப பேராலயத்தில் (இயேசுவின் தந்தை யோசேப்பு தச்சுப்பட்டறை வைத்திருந்த இடத்தில்) வலதுபக்கத்தில் உள்ளது. 

இவ்வன்னையின் பழமையான தமிழ் வார்த்தையான பயணத்தை குறிக்கின்ற அரசர்கள் போருக்கு போகும்முன் புலவர்கள் வாழ்த்தி அனுப்புகின்ற சொல்லான சிந்தாத்திரை என்ற பெயரையே போர்த்துகீசியர்கள் சூட்டினர்.   

சிந்தாத்திரை என்றால் சிந்தாத்திரை - சிந்தாத்திரி, S(Prove) Corruption of சிந்தாயாத்திரை ( Ex- சிந்தா  Not Failing - தோல்வியடையாத, நல்ல,யாத்திரை Voyage of Journey 2. Safety, Welfare, Prosperity, சுகவாழ்வு, சிந்தாத்திரையாய் போக  inf, To make a safe Voyage.

கி.பி 1606 க்குப் பிறகு மயிலை மறைமாவட்டத்திலிருந்து வந்த குருக்கள், கொளரூன் பகுதிகளில் வாழ்ந்த போர்த்துகீசியர்கள், யூரேசியர்கள், கோவா, கிறிஸ்துவ மக்கள், புதிதாக கிறிஸ்துவ மறையை தழுவியவர்களுக்கு திருப்பலியும், மறைபோதனையும், அருட்சாதனங்கள் வழங்கியதாக ஆதாரங்கள் உள்ளன.

கி.பி 1659 -இல் டச்சுக்காரர்கள் போர்த்துகீசியரிடமிருந்து கொளரூன் தீவை கைப்பற்றிய போது அதன் பண்டகசாலையை கைப்பற்றி, தேவாலயத்தை இடித்துள்ளனர். எனவே இப்ப்வாலயத்தில் இருந்த தூய சிந்தாத்திரை அன்னையின் சுரூபத்தை போர்த்துகீசியர்கள் மனமாறிய இப்பகுதி கிறிஸ்துவர்களிடம் ஒப்படைக்க, அவர்கள் கொள்ளிடம் ஆற்றின் உட்பகுதியில் வாழ்ந்த, கி.பி 1545  இல் புனித சவேரியாரால் திருமுழுக்கு பெற்று மரத்தாலான திருச்சிலுவையைப் பெற்று, அச்சிலுவையை மட்டும் வணங்கி வந்த எருக்கூர் மக்களிடம் ஒப்படைக்க, அவர்கள்    சிறிய ஆலயம் கட்டி, அதி வைத்து இன்றும் தங்கள் பாதுகாவலியாய் வைத்து வணங்கி வருகின்றனர். 

இவ்வன்னை "பயணத்தின் பாதுகாவலி, வழிசெல்வோரை விழியென காக்கும் அன்னை", தம்மகன் வழியாய் தன்னை நாடி வருவோருக்கு அருள்பொழிகின்றாள்.      


எருக்கூர் பங்கின் வரலாறு

கி.பி 1534 - இல் போர்த்துகீசிய வாணிபர்கள் நாகப்பட்டினம் வந்தடைத்து பண்டக சாலைகளையும், அதன் உள்ளே பிரான்சிஸ்கன் துறவு மடங்களையும், ஓர் சிற்றாலயத்தையும் கட்டினர். அதன் பின் மாதா பக்தியையும், மறைபரப்புப் பணியையும் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அறிவித்து பலரையும் மனமாற்றம் செய்தனர். கி.பி 1545 -இல் நாகபட்டினம் வந்த புனித சவேரியார் சிறுகடம்பனூர்,சாத்தான்குடி இரண்டிலும் தங்கிக்கொண்டு எருக்கூர், கண்டமங்கலம், கானாவூர்,    கும்பகோணம், பில்லாவடந்தை ,பெரும்பண்ணையூர், போலுர்,மணலூர், மாத்தூர், மாயவரம், மூலங்குடி ஆகிய விசாரணைகளிலும், அவற்றைச் சார்த்த ஊர்களிலும் பலரை மதம் மாற்றினர் என்பது மரபு வழி செய்தி. எருக்கூரில் திருமுழுக்கு பெற்றவர்கள் மரத்தாலான திருச்சிலுவை வைத்து வழிபட்டனர். கி.பி. 1550 - இல் கொளரூன் தீவிற்கு வந்த போர்த்துக்கீசிய குருக்கள் இப்பகுதியிலும் பலரை கிறிஸ்துவின் பால் கொண்டு வந்தனர். கி.பி 1606 - இல் மயிலை மறைமாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகு மயிலாப்பூரிலிருந்து குருக்கள் கொளரூன் மையத்திற்கு வந்து இப்பகுதியில் வாழும் கிறிஸ்துவர்களுக்கு ஆன்மிகப் பணிகளையும், திருப்பலியும் நிறைவேற்றிய ஆதாரங்கள் உள்ளன.       

கி.பி 1659 -இல் டச்சுக்காரர்கள் கொளரூனை கைப்பற்றியதால் அங்கிருந்த கிறிஸ்துவர்கள் இடம் பெயர்த்து எருக்கூர் வந்தடைந்தனர். கி.பி 1660 முதல் 1700 வரை இப்பகுதியில் போர்கள், கொள்ளை நோய்கள், வேதகலாபனைகள் நடந்த சூழலில் அருட்த்தந்தை பெரே. புனித ஜான் டி பிரிட்டோ, ஆயர் லேன்ஸ் அருட்த்தந்தை டாம் பிரான்சிஸ்கோ கிறிஸ்துவ மக்களை சந்தித்து அவர்களை உறுதிபடுத்தினர்.     

கி.பி 1678 - 1681 வரை புனித அருளானந்தர் (St - John de Britto ) இப்பகுதியில் வாழ்ந்த கிறிஸ்துவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. 

நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் கோயில்களுக்கும், சத்திரங்களை பராமரிக்கவும் நிலங்களை, ஊர் வாரியாக மானியமாகவே கொடுத்து இன்றைய சீர்காழி வட்டம் முழுவதும், சில இடங்களை தவிர ஆதினங்களுக்கும், கோயில்களுக்கும் சொந்தமாக உள்ளன. கி.பி 1659 களில் ஆட்சி புரிந்த சொக்கநாதர் சமய பொறையுடன் நடந்து கொண்டு கிறிஸ்துவர்களாக மக்கள் மாற அனுமதித்தார். கி.பி. 1665 - இல் மதுரையிலிருந்து மீண்டும் திருச்சி தலைநகரம் மாற்றப்பட்ட பின் தன் பேரன் விசயரங்க சொக்கநாதரின் பிரதிநிதியாக இராணி மங்கம்மாள் ஆட்சி புரிந்த காலத்தில் 72 பாளையங்களுக்கு உட்படாமல், தனித்து நின்ற இப்பகுதிகளில் கிறிஸ்துவர்கள் அமைதியோடு வாழ வழிவகுத்தனர்.  எனவே 1693 -இல் புனித அருளானந்தர் கொலை செய்யப்பட்ட பின் மறவநாட்டில் இருந்த கிறிஸ்துவர்கள் அங்கிருந்து வெளியேறி பல இடங்களில் குடியேறினர். பலர் எருக்கூர், எருக்கூரை சுற்றி உள்ள ஊர்களிலும் குடியேறினர். எனவே கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரவே கி.பி 1699 -களில் கனடிக்கா மிஷன் கீழ் மறைபரப்பு மையத்தளமாக  (Mission Centre ) உருவானது. கி.பி 1744 வரை கனடிக்கா மிஷனின் கீழ் இம்மையம் இருந்தது.       

எருக்கூர் மையத்தின் எல்லையாக இன்றைய ஆத்துக்குடி பங்கு, சீர்காழி, சிதம்பரம், சிலுவைபுரம், காட்டுமன்னார்குடி, அறந்தாங்கி, தண்டேஸ்வர நல்லூர், பாளையங்கோட்டை, ஸ்ரீபுத்தூர், வாலிஸ்பேட்டை பங்குகளும், கி.பி 1837 முதல் 1844 வரை தென்னூர் (கும்பகோணம் மறைமாவட்டம்) இம்மறைபணி மையத்தோடு இருந்தது. கி.பி 1777  முதல் 1839 பில்லாவடந்தை பங்கு மதுரை மிஷனிலிருந்து பாண்டிச்சேரி மிஷனில் இணைக்கப்பட்ட  போது கும்பகோணம், எருக்கூர் மறைப்பரப்பு பணி தளங்கள் பில்லாவிடந்தையின் கீழ் இணைக்கப்பட்டது.

  கி.பி 1850 களில் மோன்சிங்கோர் பொன்னாட் பாண்டிச்சேரியின் அப்போஸ்தலிக்க விக்கராக இருந்த காலத்தில் எருக்கூர், பங்காக உயர்த்தப்பட்டது. இப்பங்கு கி.பி 1899 கும்பகோணம் மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டபோது அதனுடன் இணைக்கப்பட்டது. கி.பி 1929 இல் எருக்கூர் பங்கு மயிலாப்பூர் உயர் மறைமாவட்டதோடு இணைக்கப்பட்டது.  கி.பி 1953 இல் தஞ்சை மறைமாவட்டம் உருவானபோது தஞ்சையின் கீழ் இணைக்கப்பட்டது.